2 இராஜா 5: 9 – 14
அவன் மாம்சம் ஒரு சிறு பிள்ளையின் மாம்சத்தைப் போல மாறி அவன் சுத்தமானான்
புதிய ஏற்பாட்டின் மொழியில் சொல்ல வேண்டுமானால் நாகமான் மறுபடியும் பிறந்துவிட்டான். குஷ்டரோகத்துக்கும், பாவத்துக்கும் அநேக ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் ஒருவனுக்கு வெளியில் தெரிவதைவிட ஆழமான, அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டும் மனிதனைத் தீட்டுப்படுத்தி, தனிமைப் படுத்தி அவனை சுட்டெரிப்பதற்குத் தகுதியாக்கிவிடும். நாகமான் தன் வெகுமதிகளால் தன் சுகத்தை சம்பாதிக்க நினைத்தான். இன்றும் அநேகர் தங்களுடைய நற்செயல்களால் சுத்தமாகி பரலோகம் சென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். நாகமான், தான் எதிர்பார்த்த வழியில்தான் எலிசா செயல்படவேண்டும் என்று நினைத்தான். பெருமையும் கோபமும் அவனைவிட்டு நீங்கவில்லை. கடைசியில் தன்னைத் தாழ்த்தி, எலிசாவின் வார்த்தையின்படி செய்தபோதுதான் அவன் சுத்தமானான். மனிதனின் பாவங்கள் கழுவப்பட்டு அவன் பரலோகத்துக்குப் போகவேண்டுமானால் இயேசு காட்டும் வழிதான் ஒரே வழி.
ஜெபம்
ஆண்டவரே, கோபமும் பெருமையும் என்னைத் தவறான பாதையில் கொண்டுபோய்விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.