காலைத் தியானம் – மே 30, 2020

2 இராஜா 5: 15 – 18

தேவனைத் தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை 

நாகமான் தனக்கு சுகம் கொடுத்தது இஸ்ரவேலின் தேவனே என்பதை அறிந்து அவரை விசுவாசித்தான். தன் மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் காண்பிக்கும்படி எலிசாவைப் பார்த்து சில வெகுமதிகளைக் கொடுக்க வேண்டுமென்று எலிசாவிடம் திரும்பி வந்தான். எலிசாவோ பிடிவாதமாக வெகுமதியை வாங்க மறுத்துவிட்டான்.  எலிசா ஒருவேளை வெகுமதிகளைப் பெற்றிருந்தால், நாகமான் சுகம் பெற்றதில் தனக்கும் ஒரு பங்கு உண்டு என்று சொல்லாமல் சொல்லியிருப்பான். அவன் கர்த்தருக்கு சேர வேண்டிய மகிமையில் ஒரு பகுதியைத் திருடியிருப்பான். எலிசா தன் நிலையில் உறுதியாக இருந்தான். இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் நாமும் நம் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கவேண்டும். கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக என்று வார்த்தைகளில் சொல்லிவிடுகிறோமே, நாம் எந்த விதத்திலாவது கர்த்தருடைய மகிமையைத் திருடுகிறோமா?                                              

ஜெபம்

ஆண்டவரே, எலிசாவைப் போல நானும் உம்மை மாத்திரம் மகிமைப் படுத்துவதில் உறுதியாக இருக்க பெலன் தாரும். ஆமென்.