காலைத் தியானம் – ஜூன் 01, 2020

2 இராஜா 6: 1- 7 

இரும்பை மிதக்கப்பண்ணி   

தங்களுடைய வாழ்க்கையைக் கர்த்தருக்கென்று அர்ப்பணித்து அவருடைய சீடர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளாகும்படி பயிற்சி பெற்று வந்தவர்களே தீர்க்கதரிசிகளின் புத்திரர் என்று அழைக்கப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களின் பயிற்சிகூடங்கள் கில்கால், பெத்தேல், எரிகோ, ராமா போன்ற பல இடங்களில் இருந்தன. எலிசா பல இடங்களில் கர்த்தருடைய வார்த்தையை அறிவித்து, அற்புதங்கள் பல செய்து வந்த தீர்க்கதரிசி மாத்திரமல்ல, அவர் தீர்க்கதரிசிகளின் பயிற்சி கூடங்களிலுள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுப்பதிலும் தன் நேரத்தை உபயோகித்து வந்தார். இன்று வாசித்த பகுதியில் தீர்க்கதரிசிகளின் புத்திரர் வாழ்க்கையில் நடந்த ஒரு அற்புதத்தைக் குறித்துப் பார்க்கிறோம். இது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளப்பட்ட ஒரு சாதாரண பிரச்சனையைத் தீர்ப்பதற்குக் கர்த்தர் செய்த அற்புதம்.  மரித்தவனை உயிரோடெழுப்பும் கர்த்தர், தண்ணீரில் விழுந்த கோடாரியை மிதக்கச் செய்யவும் தயாராக இருக்கிறார். உன் வாழ்க்கையின் பிரச்சனைகள் சிறியவைகளானாலும், பெரியவைகளானாலும் அவற்றைக் கர்த்தரிடம் எடுத்துச் செல். தீர்க்கதரிசிக்குத் தன் கோடாரியை மீட்டுக் கொடுத்தவர், உன் சிறிய பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கமாட்டாரா?                       

ஜெபம்

ஆண்டவரே, என் வாழ்க்கையின் சிறிய பிரச்சனைகள்கூட உமக்கு அற்பமானவை அல்ல என்பதை உணர்ந்து உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.