காலைத் தியானம் – ஜூன் 03, 2020

2 இராஜா 6: 13 – 17    

அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதைக் கண்டான் 

எலிசா கர்த்தருடைய தீர்க்கதரிசி என்பதை சீரியாவின் ராஜா அறிந்திருந்தான். அப்படியும் எலிசாவின் மீது கைவைக்க முயற்சி செய்வது கர்த்தருக்கு விரோதமான செயல் என்பதை அவன் உணரவில்லை. எலிசாவோ, தன்னைக் கொலை செய்யும்படி ஒரு இராணுவமே வந்திருந்தபோதும் சிறிதளவுகூட கவலைப் படவில்லை. கர்த்தருடைய சித்தத்தின்படி கர்த்தருடைய வேலையைச் செய்து வரும் ஊழியர்களுக்கு, அவர்கள் மூலமாக நிறைவேறவேண்டிய வேலைகள் முடியும்வரை மரணம் கிடையாது என்று ஒரு பக்தன் கூறுகிறார். எலிசா, கேயாசிக்குப் பின் தனக்கு உதவியாளனாக இருந்த புது ஊழியக்காரனின் விசுவாசத்தை உறுதிப் படுத்துவதில் தன் கவனத்தைச் செலுத்தினான். நம் கண்களுக்குத் தெரியாத ஒரு உலகம் இருப்பது நிச்சயம். கர்த்தருடைய வான சேனைகள் நம்மைச் சுற்றியிருப்பதும் நிச்சயம். நம்முடைய பாதுகாப்பு கர்த்தருடைய கரத்தில்தான் இருக்கிறது.

ஜெபம்

ஆண்டவரே, என்னைப் பாதுகாக்கிறவர் நீர் ஒருவரே என்பதை இந்நாட்களில் அதிகமாய் உணருகிறேன். உம்முடைய தூதர்களுக்காக நன்றி சுவாமி. ஆமென்.