காலைத் தியானம் – ஜூன் 07, 2020

2 இராஜா 7: 8 – 11 

இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள் 

குஷ்டரோகிகள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள். தங்களுக்குத் தேவையான அளவு பொன்னையும், வெள்ளியையும், உணவு பொருட்களையும், உடைகளையும் எடுத்துக் கொண்டு பேசாமல் ஒதுங்கியிருந்திருக்கலாம். ஆனால் அவர்களால் அப்படி இருக்க முடியவில்லை. நாம் நம்மைப் பற்றி மாத்திரம் நினைப்பது நியாமல்ல என்று சொல்லுகிறார்கள். இந்த நாட்கள், இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றிருக்கும் நமக்கும் நற்செய்தி அறிவிக்கும் நாட்கள்.  இயேசு கிறிஸ்து ஒருவரே கொடுக்கக் கூடிய இரட்சிப்பைக் குறித்து அறியாதவர்கள் இத்தனை பேர் இருக்கும் போது எப்படி நாம் அனைத்து ஆசீர்வாதங்களையும் நமக்கென்றே வைத்துக் கொண்டு மவுனமாயிருக்க முடியும்? பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலம் தாமத்தித்தால் குற்றம் நம்மீது சுமத்தப்படும் அல்லவா?  நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய இந்நாளில் நீயும் செயல்படு.

ஜெபம்

ஆண்டவரே, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறாதவர்களுக்கு உம்முடைய நற்செய்தியை அறிவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.