2 இராஜா 7: 12 – 20
கர்த்தருடைய வார்த்தையின் படியே
கர்த்தருடைய வார்த்தையின் படியே, ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது என்று பார்க்கிறோம். இருபத்திநான்கு மணி நேரத்திற்கு முன்பதாக எண்பது வெள்ளிக்காசுக்கு ஒரு கழுதைத் தலையை வாங்கி மக்கள் சாப்பிட்டதை அறிந்திருந்த பொருளாதார வல்லுநர்கள் கர்த்தருடைய வார்த்தையை நம்புவார்களா? கர்த்தரை அறியாத வல்லுநர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் கர்த்தரை அறிந்தவர்கள் எப்படி அதை விசுவாசிக்காமல் இருக்கமுடியும்? பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் சிந்தனைகளைப் பார்க்கிலும் என் சிந்தனைகளும் உயர்ந்திருக்கின்றன என்று கர்த்தர் சொல்கிறார் (ஏசாயா 55: 9). இன்று, இவ்வுலகின் விஞ்ஞானிகளின் அறிவுக்கும், மருத்துவர்களின் ஞானத்துக்கும், இயற்கையின் ஒழுங்குக்கும் அப்பாற்பட்டதை நம் இயேசு கிறிஸ்து செய்ய வல்லவர் என்பதை நீ விசுவாசிக்கிறாயா?
ஜெபம்
ஆண்டவரே, என் அறிவால் உம்மை முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்த்துகிறதற்காக நன்றி சுவாமி. ஆமென்.