காலைத் தியானம் – ஜூன் 14, 2020

2 இராஜா 10: 1 – 14           

ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை       

யெகூ கர்த்தரின் வார்த்தையின்படி ஆகாபின் வம்சத்தாரை அழித்தது சரிதான். சமாரியாவிலிருந்த ஆகாபின் எழுபது குமாரரை யுத்தமோ, சண்டையோ இல்லாமல், ராஜ தந்திரத்துடன் ஒரே நேரத்தில் அழித்துவிட்டான். அதுவும் அவர்களை வளர்த்தவர்களை வைத்தே கொன்று போடச் செய்தான். ஆனால் யெகூ கர்த்தர் செய்யச்சொன்னதோடு நிற்காமல், யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரையும் கொன்று போட்டான். அப்படி மரித்தவர்கள் இஸ்ரவேலின் ராஜாவாயிருந்த (ஆகாபின் குமாரனான) அகசியாவின் சகோதரர் அல்ல. ஆகவே கொல்லப்பட்டது தாவீது ராஜாவின் வம்சத்தார். இன்றைய பாடம், நாம் கர்த்தர் சொன்னதைச் செய்யவேண்டும். அதை முழுவதுமாகச் செய்யவேண்டும். ஆனால் அவர் சொல்லாததை, நம்முடைய சுயநலத்துக்காகவோ, அல்லது அதிக உற்சாகத்திலோ செய்துவிடக் கூடாது. கர்த்தருடைய வார்த்தையை விட்டு வலது புறமோ அல்லது இடது புறமோ விலகக் கூடாது.

ஜெபம்

ஆண்டவரே, நீர் ஆமோதித்து விடுவீர் என்ற எண்ணத்தோடு நீர் சொல்லாததையெல்லாம் செய்து விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.