2 இராஜா 10: 15 – 28
நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப் போகிறேன்
பாகால் வழிபாட்டை இஸ்ரவேலிலிருந்து அகற்ற வேண்டும் என்று யெகூ விரும்பியது கர்த்தருக்குப் பிரியமான காரியம்தான். அவன் பாகாலின் கோவிலையும் விக்கிரகங்களையும் இடித்து எரித்துப் போட்டது சரிதான். உபாகமம் 13ம் அதிகாரத்தில் காணப்படும் மோசேயின் சட்டத்தின் படி, பாகாலின் தீர்க்கதரிசிகள் கொலை செய்யப்படவேண்டும் என்று யெகூ நினைத்தது கூட சரிதான். ஆனால் அதற்காக அவன் பொய் சொல்லி, ஏமாற்றி, சூழ்ச்சி செய்து பாகாலின் அனைத்து தீர்க்கதரிசிகளையும் பணிவிடைக் காரரையும் கொன்றது சரியல்ல. பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு பதிலாக, யேகூ அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியிருந்தால் அதுவே மேலான காரியமாக இருந்திருக்கும். ஒரு நல்ல முடிவை அடைவதற்கு எந்த பாதையை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று நினைப்பது தவறு. அது கர்த்தருக்கு விருப்பமானது அல்ல. கர்த்தருடைய வேலை சீக்கிரமாக, நாம் நினைத்த நேரத்தில் முடிவடைய வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுக்கிறவர்கள் நம்மில் எத்தனை பேர்? The end does not justify the means.
ஜெபம்
ஆண்டவரே, உமக்குப் பிரியமில்லாத வழிகளில் சென்று உம்மைப் பிரியப்படுத்த முயற்சிக்கும் எனக்கு உம்முடைய இருதயத்தை அறிந்துகொள்ளும் ஞானத்தைத் தாரும். ஆமென்.