காலைத் தியானம் – ஜூன் 18, 2020

2 இராஜா 11: 13 – 21                

துரோகம் துரோகம் என்று கூவினாள்                  

யார் செய்தது துரோகம்? யோவாஸ் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதா துரோகம்? யூதாவின் ராஜ சிம்மாசனம் தாவீதின் வம்சத்தினருக்குத் தான் என்பது தெரிந்தும் அத்தாலியாள் தாவீது வம்சத்தாரைக் கொலை செய்ததுதான் துரோகம். அப்படிக் கொலை செய்துவிட்டு தன்னைத்தானே யூதாவின் அரசியாக முடிசூட்டிக் கொண்டது தான் துரோகம். வானத்தையும் பூமியையும் படைத்த தேவனாகிய கர்த்தர் ஒருவரை மாத்திரம் வணங்க வேண்டிய யூதாவில், பாகால் வழிபாட்டையும், பாகால் கோவிலையும், பலிபீடங்களையும் கொண்டு வந்து அத்தாலியாள் புகுத்தியது தான் துரோகம்!  இன்றும் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்முடைய நற்செயல்களையும், நாம் அறிவிக்கும் நற்செய்தியையும் குறை சொல்லிக் கொண்டு, அவை நாட்டின் கலாச்சாரத்துக்கு விரோதமாக நாம் செய்யும் துரோகம் என்று சொலுகிறவர்கள் உண்டு. அப்படிச் சொல்லுகிறவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும். நீ கர்த்தரைச் சேவிப்பதில் உண்மையாயிரு.

ஜெபம்

ஆண்டவரே, உலகத்தாரின் பழிச்சொல்லைக் கேட்டு கலங்காமல், என் முழு மனதுடன் உம்மையே சேவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.