காலைத் தியானம் – ஜூன் 19, 2020

2 இராஜா 12: 1 – 16                   

ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும்                   

ஏழு வயதில் ராஜாவாகிய யோவாசுக்கு நிச்சயமாக யோய்தாவின் ஆலோசனையும் வழிநடத்துதலும் தேவையாக இருந்திருக்கும். அவன் வளர்ந்து வாலிபனாகும்போது சுயமாக எடுத்த முடிவுகளில் ஒன்று ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்பது. முதலில் யோய்தா உட்பட எல்லா ஆசாரியர்கள்களும் அதில் அலட்சியமாக இருந்துவிட்டார்கள். அதற்கு பின், தேவையான பணத்தைத் திரட்டுவதற்கு யோவாஸ் சில சீர்த்திருத்தங்களைக் கட்டாயமாக அறிமுகப் படுத்தினான். ஆலயத்தைப் பழுதுபார்க்கும் வேலையும் சிறப்பாக நடந்தது. கர்த்தர் ஆலய கட்டிடங்களில் வசிக்கிறவர் அல்ல. அதே சமயம் சபையாகக் கர்த்தரை ஆராதித்து ஜெபிப்பதெற்கென்று ஒரு தனி இடம் அல்லது கட்டிடம் இருப்பது நல்லதுதான். இன்று ஆலயக் கட்டிடங்களில் பணம் செலவழிப்பது வீண் என்று நினைக்கிறவர்களும் உண்டு. அதே சமயம், கர்த்தரைவிட்டுவிட்டு ஆலயக் கட்டிடங்களையே ஆராதிக்கிறவர்களும் உண்டு. நாம் இரண்டு கூட்டத்தாரையும் சேராமல் நடுநிலையைக் கடைப்பிடிப்பது அவசியம்.        

ஜெபம்

ஆண்டவரே, நீர் உம்மை ஆராதிக்கும்படி எங்களுக்குக் கொடுத்திருக்கும் ஆலயக் கட்டிடங்களுக்காக நன்றி சுவாமி. ஆமென்.