காலைத் தியானம் – ஜூன் 21, 2020

2 இராஜா 13: 1 – 13                

கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்                            

ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய் என்ற கர்த்தருடைய வார்த்தை சங்கீதம் 50: 15ல் கொடுக்கப்பட்டிருக்கிறது. யோவாகாஸ் விக்கிரகங்களை வழிபட்டு கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்து வந்தவன். அவனுக்கு சீரியர்களிடமிருந்து எக்கச்சக்க பிரச்சனை. ஆகையால் அவனுடைய ஆபத்துக் காலத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். இரக்கமும், கிருபையும், பொறுமையும் நிறைந்த கர்த்தர் அவனுக்கு இரங்கினார். இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள் என்பது அவர்கள் நடுவே இருந்த சமாதானத்தைக் காட்டுகிறது. ஆனாலும் யோவாகாஸ் கர்த்தரை மகிமைப்படுத்தவில்லை. தன்னுடைய பாவ வாழ்க்கைக்குத் திரும்பி விட்டான்.  நீ துன்பங்களின் மத்தியிலிருந்து ஜெபிக்கும்போது, ஆண்டவரே இந்த துன்பத்திலிருந்து விடுதலை தாரும்; நான் என் பாவ வாழ்க்கையைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்று ஜெபித்ததுண்டல்லவா? நீ கர்த்தருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுகிறாயா?

ஜெபம்

ஆண்டவரே, நான் பரிசுத்தமாய் வாழ்வதற்கு அனுதினமும் உம்முடைய பெலன் வேண்டும். நீர் எனக்கு உதவி செய்யும். ஆமென்.