2 இராஜா 13: 14 – 25
எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து
யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் தன்னுடைய தகப்பனைப் பின்பற்றி கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து வந்தான். இருந்தாலும் எலிசா மரிக்கப் போகும் நேரத்தில் அவனைப் பார்க்க சென்றது யோவாசிடம் பாராட்டப்படவேண்டிய ஒரு செயல். எலிசா தன் கைகளை ராஜாவின் கைகள்மேல் வைத்தது, ராஜாவுக்குக் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைக் கொடுத்தான். இன்று கர்த்தருக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து அவருக்காக பெரிய காரியங்களைச் செய்கிற கர்த்தருடைய ஊழியர்களை அவர்களுடைய வாழ்நாட்களில் நாம் மதிக்கிறதில்லை; கெளரவிப்பதில்லை. அவர்கள் மரித்தபின் அவர்களைக் குறித்து வெகுவாய் புகழ்ந்து பேசுவதில் என்ன பிரயோஜனம்? தருணம் கிடைக்கும்போதெல்லாம், கர்த்தருடைய ஊழியர்களைச் சந்தித்து அல்லது அவர்களோடு பேசி, அவர்களை ஊக்குவிக்கத் தவறாதே.
ஜெபம்
ஆண்டவரே, நீர் எனக்கு முன்மாதிரியாகக் கொடுத்திருக்கும் அநேக ஊழியர்களுக்காக நன்றி சுவாமி. ஆமென்.