2 இராஜா 14: 1 – 16
நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது
அமத்சியாவின் ஆரம்பமும் அவன் தகப்பனுடைய ஆரம்பத்தைப் போல நன்றாக இருந்தது. ஆனால் வெகு விரைவில் கர்த்தரைவிட்டு விலகிப் போனான். ஏதோமியரோடு யுத்தம் செய்வதற்குக் கூட அவன் தன்னுடைய மூன்று லட்சம் படை வீரர்களையும், இஸ்ரவேலிலிருந்து அழைத்து வரப்பட்ட ஒரு லட்சம் வீரர்களையுமே நம்பியிருந்தான். கடைசியாக அவன் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தபோது ஏதோமியரை முறிய அடித்தான். இந்த விவரங்களை 2 நாளாகமம் 25ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். அமத்சியாவின் வெற்றியோ அவனுக்குக் கர்வத்தைக் கொடுத்தது. அந்த கர்வம் அவனுடைய மனதை இருட்டாக்கி, பார்வையை மங்கலாக்கி, நான் என்னும் அகங்காரத்தை மிகப் பெரிதாக்கிவிட்டது. அமத்சியாவின் பெருமை, அவனை இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் ஆலோசனையையும் புறக்கணிக்க வைத்தது. கடைசியில் அவனுடைய வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாயிருந்தது.
ஜெபம்
ஆண்டவரே, பெருமை என் உள்ளத்தில் தோன்றி விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.