காலைத் தியானம் – ஜூன் 28, 2020

2 இராஜா 16: 1 – 9                       

தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான்       

தீக்கடக்கப்பண்ணினான் என்பதற்கு நரபலியாய்க் கொடுத்தான் என்பது பொருள். ஆகாஸ் தன்னுடைய தகப்பனான யோதாமின் நல்ல முன்மாதிரியைப் பின்பற்றவில்லை. அவன் வெகுவாய் அசீரியர்களின் பக்கம் சாய்ந்ததால் அவர்களுடைய தெய்வங்களையும் அவர்களுடைய கொடூரமான நரபலி கொடுக்கும் பழக்கத்தையும் பின்பற்றினான். ஆகாசால் எப்படி கர்த்தருக்குச் சொந்தமான, கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்ட தன் மகனை, புறஜாதியாரின் தெய்வங்களுக்குப் பலியிட முடிந்தது? அவனுடைய மனது அவ்வளவு கடினப்பட்டுப் போயிருந்தது. இன்றும் கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்ட கோடிக்கணக்கான மனிதர் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி உனக்குக் கவலை உண்டா? அவர்களை அழிவின் பிடியிலிருந்து மீட்க நீ என்ன செய்கிறாய்?                                                 

ஜெபம்

ஆண்டவரே, என்னை அனுப்பும். என்னை உபயோகியும். நான் தயாராக இருக்கிறேன். ஆமென்.