காலைத் தியானம் – ஜூன் 29, 2020

2 இராஜா 16: 10 – 20                       

தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான்         

தீக்கடக்கப்பண்ணினான் என்பதற்கு நரபலியாய்க் கொடுத்தான் கர்த்தருடைய பரிசுத்த வாசஸ்தலம் எப்படி செய்யப்படவேண்டும் என்பதற்கு தேவையான எல்லா நுணுக்கங்களையும், மாதிரியையும் கர்த்தர் மோசேயிடம் கொடுத்தார். பேழை எப்படி செய்யவேண்டும் என்பதற்கான எல்லா நுணுக்கங்களையும் கர்த்தர் நோவாவிடம் கொடுத்தார். எருசலேம் ஆலயம் எப்படி கட்டப்படவேண்டும் என்பதையும் கர்த்தரே சாலொமோனுக்குச் சொல்லிக் கொடுத்தார். அப்படிப்பட்ட கர்த்தருக்கு, பலிபீடம் கட்டுவதற்கு மாதிரியும் நுணுக்கங்களும் தமஸ்குவிலிருந்து, அதாவது பிற தெய்வங்களுக்குப் பலியிடுபவர்களிடமிருந்து வருகிறது! இன்று இதில் நமக்கு முக்கியமான ஒரு பாடம் இருக்கிறது. உலகிற்கு ஒளியாக இருக்க வேண்டிய நம்முடைய திருச்சபைகள் பலவற்றில் இந்த நாட்களில், உலகத்தின் தவறான நிலைபாடுகள் புகுந்து விட்டன.  ஆலயங்கள் பொழுதுபோக்கு அரங்கங்களாக மாறுகின்றன.   ஆராதனைகள், நன்கு பயிற்சி செய்து நடத்தப்படும் நாடகங்களைப் போலிருக்கின்றான.  போதகர்கள் கர்த்தரை மகிமைப் படுத்துவதில் கவனம் செலுத்தாமல், மக்களை மகிழ்விப்பதிலேயே நோக்கமாய் இருக்கிறார்கள்.                                                         

ஜெபம்

ஆண்டவரே, ஆவியோடும் உண்மையோடும் மாத்திரம் உம்மைத் தொழுது கொள்ளும்படி எங்களைக் காத்துக் கொள்ளும். ஆமென்.