காலைத் தியானம் – ஜூன் 30, 2020

2 இராஜா 17: 1 – 12                       

ஓசெயா அவனைச் சேவிக்கிறவனாகி                   

வடக்கு ராஜியத்தின் கடைசி ராஜாவாகிய ஓசெயா எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான் என்று பாருங்கள். தாவீது ராஜா, ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரை மாத்திரம் சேவித்து, அவரோடு எப்பொழுதும் தொடர்பு வைத்துக் கொண்டு, தலை நிமிர்ந்து, உலகத்தையே பிரம்மிக்க வைத்துக் கொண்டிருந்தான்.  ஓசெயாவோ அசீரிய ராஜாவை சேவிக்கிறான். அவனுக்கு ஒழுங்காகக் கப்பமும் கட்டி வந்தான்.  அது பிடிக்கவில்லை என்றவுடன், எகிப்து அரசனிடம் உதவி கேட்டு தூதுவர்களை அனுப்பினான். இஸ்ரவேலின் கர்த்தர் என்றழைக்கப்படுகிற யெகோவாவை நோக்கிப் பார்க்கவேண்டும் என்ற எண்ணமே ஏன் அவனுக்கு வரவில்லை? உனக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டால் மனிதரை நம்பி ஓடுகிறாயா அல்லது கர்த்தரை நோக்கிப் பார்க்கிறாயா?                                                 

ஜெபம்

ஆண்டவரே, எனக்கு இக்கட்டான நிலை வந்தாலும் வராவிட்டாலும், உம் ஒருவரையே அனுதினமும் நோக்கிப் பார்க்கும் இனிய இருதயத்தைத் தாரும். ஆமென்.