காலைத் தியானம் – ஜூலை 07, 2020

2 இராஜா 18: 13 – 16

நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன்              

மிகவும் சிறப்பாக ஆரம்பித்த எசேக்கியாவுக்கு என்ன நிகழ்ந்தது? ஏன் அவன் கர்த்தரை அறியாத ஒரு மனிதனைப் போல செயல்படுகிறான்? மூன்றாம் வசனத்தில் எசேக்கியா தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் என்று பார்த்தோம் அல்லவா? தாவீது நிச்சயமாக இப்படி அசீரியாவின் ராஜாவுக்குக் கப்பம் கட்டியிருக்க மாட்டான். அதுவும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொடுப்பது நினைத்துக் கூட பார்க்கமுடியாத காரியம். அதிர்ச்சியைத் தரும் காரியம். இதிலிருந்து நமக்கு இரண்டு பாடங்கள். நன்றாக ஆரம்பித்து விட்ட யாவரும் இவ்வாழ்க்கையை நன்றாக முடித்து விடுவதில்லை. இரண்டாவதாக, பிரச்சனைகளைக் கண்டு பயந்துவிடுகிற மனிதன் கர்த்தரை மறந்து விடுவான். அவன் கண்களுக்குப் பிரச்சனைகளைத் தவிர வேறே எதுவும் தெரிகிறதில்லை. கர்த்தரை விட்டு ஒருபோதும் விலகாதே.     

ஜெபம்

ஆண்டவரே, நான் எதிர்கொள்ளும் பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீர் என் அருகிலேயே இருந்தால் நான் பயப்பட மாட்டேன். பயப்படாத இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.