காலைத் தியானம் – ஜூலை 20, 2020

2 இராஜா 22: 8 – 10         

கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டுபிடித்தேன்            

அந்த நாட்களில் கைகளினால் எழுதப்பட்ட நியாயப்பிரமாண புத்தகங்கள் தான் உண்டு. ஆகையால் அநேகப் பிரதிகள் இருந்திருக்க முடியாது. இருந்த ஒரு சில பிரதிகளும் எங்கே என்று ஒருவருக்கும் தெரியவில்லை! யூதா நாடு ஏன் அப்படி ஒரு இழிவான நிலைக்குப் போனது என்பது இப்போது புரிகிறது. கர்த்தருடைய வார்த்தையைத் தொலைத்துவிட்ட மனிதருக்குள் கர்த்தரைக் குறித்த அறிவும் பயமும் எப்படி இருக்கும்? இன்று உலகமெங்கும் பல கோடிக்கணக்கான வேதாகமங்கள் இருந்தாலும் அநேக வேதாகமங்கள் எங்காவது தூங்கிக் கொண்டிருக்கின்றன. கர்த்தருடைய வார்த்தையை அறியாதவர்கள்தான் அநேகர். கர்த்தருடைய வார்த்தையை அறியாதவர்கள் மத்தியில் எப்படி உண்மையும் ஒழுக்கமும் இருக்கும்? உன் பிள்ளைகளிடம் வேத வசனங்களை அனுதினமும் வாசித்து தியானிக்கும் பழக்கத்தை ஏற்படுத்து. அப்போது பெரியவர்களாகும்போது கர்த்தர் காட்டும் வழியில் நடப்பார்கள்.                     

ஜெபம்

ஆண்டவரே, வேதாகமத்தை அனுதினமும் வாசித்து தியானிக்கும் பழக்கத்தை என் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தாரும். ஆமென்.