காலைத் தியானம் – ஜூலை 21, 2020

2 இராஜா 22: 11 – 13         

நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது

கர்த்தருடைய கற்பனைகளையும் நியாயப்பிரமாணங்களையும் வாசிக்கும்போதுதான் யோசியாவுக்குத் தன் முன்னோர்கள் செய்த பாவங்களின் கொடூரம் தெரிந்தது. அது அவனை மிகவும் துக்கப்படுத்தியது. கர்த்தர் ஏன் யூதா மக்கள் மீதும் இஸ்ரவேலர் மீதும் அவ்வளவு கோபமாயிருந்தார் என்பது புரிந்தது. நியாயப்பிரமாணங்களுக்கும் கற்பனைகளுக்கும் மூன்று நோக்கங்கள் உண்டு என்பதை மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்வோம். முதல் நோக்கம் கர்த்தருடைய பரிசுத்தத்திற்கு முன் நாம் எப்பேர்ப்பட்ட பாவி என்பதை உணரவைக்கிறது. இரண்டாவதாக நாம் நம்முடைய சொந்த முயற்சியால் பாவத்தைவிட்டு வெளியேறி பரிசுத்தத்தைப் பெற முடியாது என்பதை வெளிப்படுத்தி இயேசு கிறிஸ்துவுக்கு நேராக நம்மைப் போகவைக்கிறது. மூன்றாவதாக, இயேசுவால் மன்னிக்கப்பட்டு, சுத்தமாகக் கழுவப்பட்டபின், தொடர்ந்து அவருடைய உதவியுடன் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என்பதை நமக்குக் காட்டுகிறது.                           

ஜெபம்

ஆண்டவரே, என் உறவினர்களிலேயே, தங்கள் பாவத்தின் கொடூரத்தை அறியாதவர்கள் உண்டு சுவாமி. அவர்களையும் மனந்திரும்பி உம்மிடம் வரச்செய்யும். ஆமென்.