காலைத் தியானம் – ஜூலை 23, 2020

2 இராஜா 23: 1 – 3            

கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கை பண்ணினான்

யூதாவின் ராஜாவாகிய யோசியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தையும் அவருடைய முடிவுகளும் வெளிப்படுத்தப்பட்டுவிட்டன. கர்த்தர்தான் முடிவுசெய்து விட்டாரே என்று சொல்லி அவன் சும்மாயிருக்கவில்லை. கர்த்தரோடு நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளும் பயணத்தைத் தொடருகிறான். ஆசாரியரையும், தீர்க்கதரிசிகளையும், சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லா மக்களையும் ஆலயத்துக்கு வரவழைத்து, நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் அனைவருக்கும் கேட்கத்தக்கதாக வாசிக்கிறான். கர்த்தரோடு உடன்படிக்கைபண்ணினான். மேலும் எல்லா ஜனங்களும் அந்த உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள் என்றும் பார்க்கிறோம். யோசியாவிடம் காணப்பட்ட வைராக்கியம் உன்னிடம் உண்டா?       

ஜெபம்

ஆண்டவரே, உம்மைக் குறித்த வைராக்கியத்தை எனக்கும் தாரும். ஆமென்.