காலைத் தியானம் – ஜூலை 25, 2020

2 இராஜா 23: 26 – 30               

பார்வோன்நேகா அவனைக் கொன்றுபோட்டான்

யூதாவுக்கு வரும் பொல்லாப்பைக் காணாதபடி அல்லது அனுபவிக்காதபடி உன்னை பூமியைவிட்டு எடுத்துக்கொள்வேன் என்று கர்த்தர் யோசியாவிடம் சொன்னதை 22ம் அதிகாரத்தில் பார்த்தோம். அது யோசியாவுக்கு ஒரு ஆசீர்வாதமாகக் கொடுக்கப்பட்டது. நீண்ட ஆயுளே ஆசீர்வாதம் என்று நினைத்துப் பழகிய நமக்கு, மரணம் ஒரு ஆசீர்வாதமாக இருக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாயிருக்கிறது. அதிலும் கர்த்தரை அவ்வளவாய் நேசித்து அவருக்காகப் பெரிய காரியங்களைச் செய்த ராஜாவுக்கு யுத்தத்தில் கொல்லப்படுவதுதான் சிறந்த மரணமா? சமீப காலத்தில் மரித்த சில கர்த்தருடைய ஊழியக்காரரை நினைத்துப் பார்க்கும்போதும் ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் மரணம்? ஏன் இப்படிப்பட்ட மரணம்? போன்ற கேள்விகள் நம் மனதில் எழும்புகின்றன.  கர்த்தருடைய வழிகள் நம்முடைய புத்திக்கு எட்டாதவை. தம்முடைய பிள்ளைகளுக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.            

ஜெபம்

ஆண்டவரே, நான் எவ்வளவு குறைந்த அறிவுள்ளவன் என்பதை உணருகிறேன். எந்த சூழ்நிலையிலும் என் விசுவாசம் அசைக்கப்படாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.