காலைத் தியானம் – ஜூலை 27, 2020

2 இராஜா 24: 1 – 9                

கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்      

மனாசே சிந்தின குற்றமற்ற இரத்ததிற்காகவும், எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தினால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மனாசேயையும் யூதாவையும் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார் என்பதைப் பார்க்கிறோம். ஒரு பாவத்தை மற்ற பாவங்களைவிட பெரிய பாவம் என்று நாம் பிரிக்க முயல்வது சரியல்ல. இருந்தாலும் சரித்திரப் பின்னணியில் பார்க்கும்போது, கர்த்தரை மிகவும் கோபப்படுத்தும் அல்லது வருத்தப்படுத்தும் பாவங்கள் என்ற வரிசையில் கர்த்தரைத் தவிர மற்ற தெய்வங்களை வணங்குவதும், குற்றமில்லாதவர்களைக் கொலை செய்வதும் முன்னணியில் இருக்கின்றன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு உன் உள்ளத்தில் கொடுக்கவேண்டிய பிரதான இடத்தையும் ஆராதனையையும் வேறே யாருக்காவது அல்லது வேறே எந்த பொருளுக்காவது கொடுப்பது முதலாம் பிரதான கற்பனையை மீறுவதாகும். உன் சகோதரன் மீது நியாயமில்லாமல் கோபப்படுவது கொலைக்குச் சமம் என்று இயேசு சொன்னைதையும் நினைவில் கொள்ளுவோம்.                              

ஜெபம்

ஆண்டவரே, உமக்குக் கோபம் உண்டாக்காதபடி என் எண்ணங்களையும், வார்த்தைகளையும், செயல்களையும் காத்துக் கொள்ள எனக்கு உதவி செய்யும்.   ஆமென்.