2 இராஜா 24: 10 – 20
சிதேக்கியா என்று மறுபேரிட்டான்
அந்த காலத்தில் அசீரியா, எகிப்து, பாபிலோன் ஆகிய தேசங்கள் மாறி மாறி வல்லரசுகளாக உருவெடுத்துக் கொண்டிருந்தன. அசீரியா முன்னணியில் இருந்த காலம் ஒன்று உண்டு. இப்போது பாபிலோன் முன்னணிக்கு வந்துகொண்டிருந்தது. பாபிலோனின் ராஜா, மத்தனியாவை எருசலேமில் ராஜாவாக நியமித்து அவன் பெயரையும் சிதேக்கியா என்று மாற்றுகிறான். சிதேக்கியா பாபிலோனுக்கு எப்போதும் உண்மையுள்ளவனாக இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்குதான் இந்த பெயர் மாற்றம். உன் பெயரில் மாற்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீ உன் வாழ்க்கையைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்த தருணம், எப்போதும் நீ கர்த்தருக்கு உண்மையுள்ளவனா(ளா)க இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்தவேண்டும்.
ஜெபம்
ஆண்டவரே, நான் உமக்கே சொந்தமானவன்(ள்) என்பதை எப்போதும் நினைவில் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.