22 இராஜா 25: 13 – 22
கெதலியாவை அதிகாரியாக வைத்தான்
அரண்மனையும் கர்த்தருடைய ஆலயமும் சூரையாடப்படுகிறது. அரண்மனை ராஜாவின் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் இடம். அதைக் கொள்ளையடித்து அழிப்பதின் மூலமாக உன் ராஜா என்னுடைய அடிமை என்று பாபிலோனின் ராஜா தன் செயலில் காட்டுகிறான். ஆலயத்தை சூரையாடி அழிப்பதின் மூலமாக உங்கள் தேவனால் ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிவிக்கிறான். இவைகளையெல்லாம் அனுமதித்த கர்த்தர் யூதாவில் கெதலியாவை அதிகாரியாக வைக்கப்படதான் அனுமதிக்கிறார். ராஜாவாக அல்ல. ராஜாவின் சிம்மாசனம் தாவீதின் வம்சத்துக்கு மாத்திரமே சொந்தம்.
ஜெபம்
ஆண்டவரே, உமக்கு எருசலேம் ஆலயத்தைவிட என் இருதயம் தான் முக்கியம் என்பதை மறுபடியும் நினைவுபடுத்துவதற்காக நன்றி சுவாமி. ஆமென்.