காலைத் தியானம் – ஜூலை 31, 2020

2 இராஜா 25: 23 – 30                    

யோயாக்கீனை . . . தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்      

யோயாக்கீன் 3 மாதங்கள் யூதாவின் ராஜாவாக இருந்தான். முப்பத்தேழு வருடங்கள் பாபிலோனில் சிறைக் கைதியாக இருந்தான். முப்பத்தேழாம் வருடத்தில் நேபுகாத் நேச்சாருடைய மகனான ஏவில் மெரொதாக் தன் தகப்பனைத் தொடர்ந்து பாபிலோனின் ராஜாவானான். அப்போது யோயாக்கீன் விடுதலை பெற்று உயர்த்தப்படுகிறான். யோயாக்கீம் கைப்பற்றப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டுவரப்பட்ட மற்ற ராஜாக்களை விட அதிக மரியாதையுடன் நடத்தப்படுகிறான். இந்த நிகழ்ச்சி எரேமியா 52: 31 முதல் 34 வரையுள்ள வசனங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் இங்கு சொல்லப்படவில்லை. ஆனால் கர்த்தருடைய திட்டத்தின்படி தான் இதுவும் நடந்தது என்பது மாத்திரம் நமக்குத் தெரியும்.    

ஜெபம்

ஆண்டவரே, என் வாழ்க்கையில் நடக்கும் அநேக நிகழ்ச்சிகளுக்குக் காரணம் எனக்குத் தெரியாது. ஆனால் அவை அனைத்தும் உம்முடைய சித்ததிற்கு உட்பட்டவை என்பது மாத்திரம் எனக்குத் தெரியும். உமக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.