காலைத் தியானம் – ஆகஸ்ட் 02, 2020

1 நாளா 1: 28- 54                    

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்           

இஸ்ரவேல் என்னும் தேசம், கர்த்தர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் உருவாகிய தேசம். ஆகையால் யூதன் ஒவ்வொருவனும் தன்னுடைய வம்ச அடிச்சுவட்டை ஆபிரகாம் வரை கொண்டுசெல்வதை மிகவும் அவசியம் என்று கருதினான். வேறு விதமாகச் சொல்ல வேண்டுமானால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு (இஸ்ரவேல்) என்ற வம்ச வழியில் வந்தவன் என்று ஒருவன் நிரூபித்தால் மாத்திரமே அவனுக்கு யூதன் என்று இஸ்ரவேலில் வாழும் உரிமை இருந்தது. ஆகவே இந்த வம்ச வரலாறு முக்கியமாகக் கருதப்பட்டது. புதிய ஏற்பாட்டுக் காலத்தில்கூட, ஆபிரகாமின் சந்ததியாருக்கு மாத்திரமே இரட்சிப்பு (மற்றும் பரலோகம்) உண்டு என்று யூதர்கள் தவறாக நினைத்தார்கள். யோவான் ஸ்நானனோ, ஆபிரகாமின் குமாரன் அல்லது குமாரத்தி என்பதல்ல, மனந்திரும்புதலே முக்கியம் என்று பிரசங்கித்தான் (லூக்கா 3: 8).  அது மாத்திரமல்ல, (மனந்திரும்பி) இயேசுவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் என்று யோவான் 1:12ல் பார்க்கிறோம். இன்று உன்னுடைய வம்ச வரலாறு கர்த்தருக்கு முக்கியமல்ல. நீ கர்த்தருடைய பிள்ளையா என்பது மாத்திரம்தான் அவருக்கு முக்கியம்.           

ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னையும் உம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொண்டதற்காக நன்றி சுவாமி. ஆமென்.