எஸ்றா 1: 1 – 3
எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே
எரேமியா தீர்க்கதரிசியின் மூலாமாக முன்னறிவிக்கப்பட்டபடி (எரேமியா 25:11-13) 70 வருட பாபிலோன் சிறையிருப்பு முடிந்தவுடன் கர்த்தர் செயல்படுவதைப் பார்க்கிறோம். எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன் என்று சொன்னவன் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ். அவன் யூதன் அல்ல. இயேசு கிறிஸ்து இவ்வுலக மக்கள் அனைவருக்கும் தேவன். கர்த்தர் கோரேசின் ஆவியை ஏவினார். பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர், தமக்கு எருசலேமின் ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று கோரேஸ் சொல்லுகிறான். பூமியிலுள்ள மனிதர் அனைவரும் கர்த்தருடைய படைப்புதான். அதை உணர்ந்து அவரை ஏற்றுக் கொள்ளுகிறவனே கிறிஸ்தவன். ஒரு மதத்தைப் பின்பற்றுவதால் ஒருவனும் கிறிஸ்தவன் ஆகமுடியாது. கர்த்தர் உன் திருச்சபை மக்களுடன் மாத்திரமே பேசுகிறார் என்று நினைக்காதே.
ஜெபம்
ஆண்டவரே, நீரே கர்த்தர் என்பதை உலக மக்கள் அனைவரும் அறிக்கையிட்டு, உம்மைப் பணிந்துகொள்ளும் காலம் நெருங்கிவிட்டது என்பதால் மகிழ்ச்சியடைகிறேன். உமக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.