காலைத் தியானம் – ஆகஸ்ட் 08, 2020

எஸ்றா 2: 1- 41

பாடகர்களானவர்கள் ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர் 

செருபாபேல் என்று எஸ்றா 2: 2ல் குறிப்பிடப்பட்டிருப்பதும், சேஸ்பாத்சார் என்று எஸ்றா 1: 8ல் குறிப்பிடப் பட்டிருப்பதும் ஒரே ஆள் தான். செருபாபேலின் தலைமையில் தான் இஸ்ரவேலர் தேவாலயத்தைக் கட்டும்படி எருசலேமுக்குத் திரும்பினார்கள். இந்த செருபாபேல் யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியாவின் பேரன் (1 நாளாகமம் 3: 16-19). ஆகையால் செருபாபேல் தாவீதின் வம்சத்தான். வம்ச அட்டவணையின் முக்கியத்துவத்தை ஏற்கனவே பார்த்தோம். லேவியர் ஆலய வழிபாட்டு ஊழியத்துக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்கள். ஒருவன் லேவியின் வம்சத்தானாக இருந்தால் மாத்திரமே ஆசாரியனாக இருக்கமுடியும். அது போல பாடகர்களும் லேவியின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இன்று நம் ஆலயங்களில், நன்றாகப் பாடும் திறமையுள்ளவன்(ள்) என்ற ஒரு தகுதி இருந்தாலே பாடகர் குழுவில் இருக்கலாம் என்ற நிலை இருக்கிறது.  அது தவறு. பாடகர்கள் கர்த்தரை ஆராதிப்பதில் சபையை வழிநடத்துகிறவர்கள். கர்த்தருக்கென்று தங்களை ஒப்புக்கொடுத்து அதற்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்களே பாடகர்களாக இருக்கவேண்டும்.

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய ஊழியத்துக்குத் தேவையான பயபக்தியையும் அர்ப்பணிப்பையும் எனக்குத் தாரும். ஆமென்.