எஸ்றா 3: 1- 6
தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்
ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்ப வந்த யூதர்கள் முதலாவதாக தேவனுக்கு பலிபீடத்தைக் கட்டினார்கள். பலிபீடத்தில் செலுத்தவேண்டிய எல்லா பலிகளையும் செலுத்த ஆரம்பித்தார்கள். பலிபீடம் கர்த்தருடைய பிரசன்னத்துக்கும் அவருடைய பாதுகாப்புக்கும் அடையாளமாக இருந்தது. அது, கர்த்தரைச் சேவித்து அவரைத் தொழுதுகொள்வதே மனிதனின் பிரதான குறிக்கோள் என்பதை அவனுக்கு நினைவுபடுத்தியது. பலிபீடத்தில் செலுத்தப்பட்ட பலிகள் மனிதன் கர்த்தரிடம் பாவங்களை மன்னிக்கும்படி மன்றாடி பாவமன்னிப்பைப் பெறவும், கர்த்தருடைய வழிநடத்துதலை அறிந்துகொள்ளவும் உதவின. இன்று பல ஆலயக் கட்டிடங்களைக் கட்டுகிறோம். அது தேவைதான். நல்லதுதான். ஆனால் உன் இருதயத்தில் பலிபீடத்தைக் கட்டி அதில் அனுதினமும் உன் ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தாவிட்டால் , ஆலயக் கட்டிடங்களால் எந்த பிரயோஜனமும் இல்லை.
ஜெபம்
ஆண்டவரே, என் இருதயத்தில் நான் ஏறெடுக்கும் பலிகளை ஏற்றுக்கொண்டு என்னை வழிநடத்தும். ஆமென்.