எஸ்றா 3: 7- 11
அஸ்திபாரம் போடுகிறபோது . . . . கர்த்தரைத் துதிக்கும்படி
எருசலேம் தேவாலயம் மறுபடியும் கட்டப்படவேண்டும் என்ற உத்தரவு கர்த்தரிடமிருந்து கோரேஸ் ராஜா மூலமாக வந்துவிட்டது. அதைச் செய்வதற்கு மனிதர்கள் முன்வந்து விட்டார்கள். பொருளுதவியும் வந்து குவிந்தது. பலிபீடம் கட்டப்பட்டு பலிகள் செலுத்தப்பட்டன. இப்போது அஸ்திபாரம் போடும் நேரம் வந்துவிட்டது. இன்றைய தொழில் உலகிலும், மருத்துவ உலகிலும், விஞ்ஞான உலகிலும் process மிகவும் முக்கியம். இத்துறைகளில் முதலில் என்ன செய்யவேண்டும், இரண்டாவதாக என்ன செய்யவேண்டும், மூன்றாவதாக என்ன செய்யவேண்டும் என்பது மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பார்த்தால் ஆலயம் கட்டும் முறையை யூதர்கள் சரியாகக் கடைப் பிடித்தார்கள். அதில் கர்த்தரைத் துதிப்பதுதான் முக்கியமான பகுதி. கர்த்தருடைய கிருபை உன்னோடிருக்காவிட்டால், நீ எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும்.
ஜெபம்
ஆண்டவரே, உமது கிருபை எப்போதும் என்னோடிருப்பதாக. ஆமென்.