காலைத் தியானம் – ஆகஸ்ட் 13, 2020

எஸ்றா 4: 1 – 6

உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்

ஒரு நல்ல வேலை செய்யும்போது, நானும் உன்னுடனே சேர்ந்து செய்கிறேன் என்று வருகிறவர்களிடம் எப்படி வேண்டாம் என்று சொல்வது? இன்றைய வேத பகுதியிலிருந்து நாம் படித்துக் கொள்ளவேண்டிய பாடங்கள் பல உண்டு. முதலாவதாகக் கர்த்தருடைய வேலையைச் செய்யும்போது சாத்தான் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கமாட்டான். இரண்டாவதாக, தானும் உள்ளே வந்து நல்லதைச் செய்ய விரும்புவதைப் போல சாத்தான் நாடகம் போடுவான்.  அப்படிப்பட்ட சூழ்ச்சிக்கு விழுந்துவிடுவதால்தான், இன்று திருடர்களும், கொள்ளைக்காரர்களும், அட்டூழியக்காரர்களும் பல திருச்சபைகளின் நிர்வாகத்துக்குள்ளே வந்துவிட்டார்கள். மூன்றாவதாக அப்படிப்பட்ட சூழ்ச்சிக்கு நீ விழவில்லை என்றால், சாத்தான் உன்னை எதிர்க்க ஆரம்பித்துவிடுவான். அவனுடைய எதிர்ப்பும் அச்சுறுத்துதலும் பல திசைகளிலிருந்தும் வரும். நீ செய்யும் ஊழியத்துக்கோ அல்லது ஒரு நற்செயலுக்கோ எதிர்ப்புகள் வரும்போது, உன் ஆண்டவரை நோக்கிப் பார்.

ஜெபம்

ஆண்டவரே, சாத்தானின் சூழ்ச்ச்சிகளுக்கு என்னை விலக்கிக் காரும். அவன் என்னைத் திகைக்க வைக்கும் நேரங்களில் நான் என்ன செய்யவேண்டும் என்பதை நீரே எனக்குக் காட்டும். ஆமென்.