காலைத் தியானம் – ஆகஸ்ட் 15, 2020

எஸ்றா 5: 1- 5

அவர்களுக்குத் திடன் சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகள் இருந்தார்கள்

மறுபடியும் பாபிலோனில் வேறொரு ராஜா வந்துவிட்டான். அவன் பெயர் தரியு. இஸ்ரவேலர் ஆலயம் கட்டும் பணியைத் தொடங்கிவிட்டனர். எதிர்ப்புகளும் தொந்தரவுகளும் மனவேதனையும் குறையவில்லை. அந்நேரம் ஆகாய், சகரியா ஆகிய தீர்க்கதரிசிகள் மக்களுக்கு தைரியம் சொல்லுகிறார்கள். கர்த்தருடைய வார்த்தையை மக்களுக்குச் சொல்வதும், விசுவாசிகளை ஊக்குவிப்பதும் தீர்க்கதரிசிகளின் வேலை. இன்றைய திருச்சபையிலும் அப்படிப்பட்ட தீர்க்கதரிசன குரல்கள் தேவை. தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கொண்டுவரும் கர்த்தருடைய ஊழியக்காரரைத் தாங்குவதும் அவர்களை ஊக்குவிப்பதும் சபையாரின் கடமை.  

ஜெபம்

ஆண்டவரே, உமது ஊழியர்களைத் தாங்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டிய உற்சாகத்தை எனக்குத் தாரும். ஆமென்.