எஸ்றா 6: 1- 12
அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக
இந்த யூதர்கள் சொல்லுவது உண்மைதானா என்று அறியும்படி தரியு ராஜா, பழையகாலத்து ஆவணங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அறையைச் சோதனையிடச் சொல்லுகிறான். குறிப்பிட்ட ஆவணச் சுருள் கண்டெடுக்கப் பட்டது. அதில் யாரும் எதிர்பார்க்காத சில தகவல்களும் இருந்தன. ஆலயம் எப்படி கட்டப்படவேண்டும் என்பதும் அதற்கான செலவை ராஜாவின் அரண்மனையிலிருந்தே கொடுக்கவேண்டும் என்பதும்கூட அந்த சுருளில் குறிப்பிடப்பட்டிருந்தது. கர்த்தருடைய நேரம் வரும்போது எந்த வலிமையான எதிர்ப்பும் அவருடைய சித்தம் நிறைவேறுவதைத் தடுக்கமுடியாது. கர்த்தருடைய சித்தம், பூமியை ஆளும் ராஜாக்கள், சரித்திர நிகழ்ச்சிகள் மற்றும் எதிர்க்கும் சக்திகள் அனைத்தையும்விட அதிக வல்லமையுள்ளது.
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய சித்தத்தை அறிந்து அதின்படி செயல்படும் ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.