எஸ்றா 6: 13- 22
அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப் பண்ணினார்
இஸ்ரவேலர் ஆலய பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். அந்த கொண்டாட்டம், சாலொமோன் ராஜா பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆலயத்தைக் கட்டி அதைப் பிரதிஷ்டை செய்யும்போது கொண்டாடிய கொண்டாட்டத்துக்கு ஒப்பானதாக இருந்தது. அசீரியருடைய ராஜாவின் கண்களில் அவர்களுக்குக் கிடைத்த தயவு அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தது. நாம் அநேகத் தேவைகளுக்காகக் கர்த்தரிடம் ஜெபிக்கிறோம். ஒரு மனிதனுடைய மனதையோ அல்லது ஒரு குழுவினருடைய விருப்பு வெறுப்புகளையோ கர்த்தர் மாற்றும்படி என்றாவது ஜெபித்ததுண்டா? மனிதருடைய மனதை மாற்றுவதும் அதை உனக்குச் சாதகமாக இருக்கப்பண்ணுவதும் உன் ஆண்டவருக்கு எளிதான காரியம்.
ஜெபம்
ஆண்டவரே, என் உழைப்பின் பலனை அனுபவிக்கும்படி மனிதர் கண்களிலேயும் எனக்குத் தயவு கிடைக்கச் செய்யும். ஆமென்.