எஸ்றா 8: 1 – 20
லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை
எஸ்றாவின் எருசலேம் பயணம் தாமதப்பட்டது. ஏனென்றால் அவர் தம்மோடு செல்லும்படி லேவியரைத் தெரிந்தெடுக்கக் காத்திருந்தார். லேவியர் கர்த்தருடைய வேலைக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களோ எஸ்றாவோடு செல்லத் தயாராக இல்லை. பாபிலோனின் வசதி, பழகிவிட்ட இடத்தின் சொகுசு, புதிய இடம் செல்வதற்கு இருந்த தயக்கம் ஆகியவை ஒரு லேவியனைக் கூட விட்டுவைக்கவில்லை. இன்று உன் நிலையும் அப்படித்தான் இருக்கின்றதோ? அழைப்பு வந்தும் அசையாமல் இருக்கிறாயா? அல்லது நீ விரும்பும் ஊழியர்கள் யாரவது வந்து உன்னை அழைத்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறாயா? ஆண்டவர் உனக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகளையும் திறமைகளையும் உன் ஆண்டவருக்கென்று நீயாகக் கொடு. அவர் வாசல்களைத் திறப்பார்.
ஜெபம்
ஆண்டவரே, சொகுசான சூழ்நிலையிலிருந்து என்னைத் தட்டியெழுப்பி உமக்குப் பிரியமானவைகளைச் செய்யும்படி என்னை உபயோகியும். ஆமென்.