எஸ்றா 8: 21- 36
சேவகரையும் குதிரை வீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்
ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளவேண்டும். வழிப்பறியர்கள் நிறைந்த பாதை. அதுவும் மக்கள் எருசலேம் ஆலயத்துக்காகக் காணிக்கையாகக் கொடுத்த அதிக விலைமதிப்புள்ள வெள்ளியையும் பொன்னையும் கொண்டு செல்லவேண்டும். எதைக் கேட்டாலும் தரும் ராஜாவிடம் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்பதுதான் என்னைப் போன்றவர்கள் செய்யும் முதல் காரியமாக இருந்திருக்கும். எஸ்றாவோ அப்படி நினைக்கவில்லை. உபவாசம்பண்ணி ஆண்டவரை நோக்கிப் பார்த்தான். மக்களை தேவனுக்கு முன்பாகத் தாழ்த்துவதற்கும், பாதுகாப்பான பயணத்துக்காகவும், பிள்ளைகளும் பொருட்களும் காப்பாற்றப்படவும் எஸ்றாவும் அவனுடன் இருந்தவர்களும் உபவாசம் இருந்து ஜெபித்தார்கள். ஒரு பயணத்தை மேற்கொள்வதற்கு முன் நாம் நம்மைத் தயார் செய்வதற்கும், எஸ்றா தயார் செய்ததற்கும் உள்ள வித்தியாசங்களை ஆராய்ந்து பார்ப்போமாக.
ஜெபம்
ஆண்டவரே, என்னுடைய எல்லா தேவைகளுக்கும் உம்மிடம் உபவாசத்தோடும் ஜெபத்தோடும் வர என்னைப் பக்குவப்படுத்தியருளும். ஆமென்.