எஸ்றா 9: 1- 9
பரிசுத்த வித்துத் தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று
இஸ்ரவேல் மக்கள் இஸ்ரவேலரல்லாத புறஜாதியினரோடு பெண் கொள்ளவும் கொடுக்கவும் கூடாது என்பது கர்த்தருடைய கட்டளை. இது ஏதோ ஒரு வகையான ஜாதி, மதத் தீவிரவாதம் என்று நினைத்துவிடக்கூடாது. இந்தக் கட்டளையின் நோக்கம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதற்காக அல்ல. உலகனைத்தையும் படைத்த கர்த்தரைத் தொழுதுகொள்பவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை அழிந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்தக் கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. கர்த்தரை அறியாதவர்களைத் திருமணம் செய்துகொண்டு, கர்த்தரை விட்டு விலகிய யூதர்களின் சரித்திரத்தை வேதாகமத்தின் பல பகுதிகளில் நாம் வாசிக்கிறோம் அல்லவா? புதிய ஏற்பாட்டில் 2 கொரிந்தியர் 6:14ல் அதே காரணத்துக்காகத்தான், விசுவாசிகள் கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களோடு இணைக்கப்படக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. நீயும் உன் குடும்பத்தாரும் திருமண காரியத்தில் மிகவும் கவனமாயிருங்கள்.
ஜெபம்
ஆண்டவரே, என் வாழ்க்கையையும் என் பிள்ளைகளின் வாழ்க்கையையும் பரிசுத்தமாகக் காத்துக் கொள்ளும். ஆமென்.