காலைத் தியானம் – ஆகஸ்ட் 25, 2020

எஸ்றா 9: 10 – 15 

நீர் நீதியுள்ளவர்; நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல

எஸ்றா யூதரல்லாத புறஜாதியினரிடமிருந்து பெண் கொள்ளவில்லை. இருந்தாலும் அவனுடைய செய்கையையும் ஜெபத்தையும் கவனியுங்கள்.  மக்கள் செய்த குற்றத்திற்காகத் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு மனவேதனைப் படுகிறான்.  ஆண்டவரிடம், இந்த மக்கள் இப்படி செய்துவிட்டார்கள் என்று சொல்லவில்லை. நாங்கள் உமது கற்பனையை விட்டுவிட்டோம் என்று சொல்கிறான். மேலும், இப்படித் துணிந்து பாவம் செய்யும் இந்த மக்களுக்குச் சரியான தண்டனையைக் கொடுத்து நீதி செய்ய மாட்டீரா என்று கேட்கவில்லை. எங்களில் ஒருவரும் உம்முடைய நீதிக்குமுன் நிற்கத் தகுதியற்றவர்கள்; ஆகையால் எங்கள்மீது இரக்கமாயிரும் என்றே கேட்கிறார். இன்று மக்களோடு சேர்ந்து மக்களுக்காக இப்படி ஜெபிக்கும் தலைவர்கள் திருச்சபைக்குத் தேவை.   

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய பிள்ளைகளோடு சேர்ந்து மன்றாடும் தாழ்மையான மனதுள்ள தலைவர்களை எங்கள் மத்தியில் எழுப்பியருளும். ஆமென்.