எஸ்றா 10: 1 – 44
நீர் இப்பொழுதும் நீங்கள் . . . கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு
கர்த்தரிடத்தில் நம் பாவங்களை அறிக்கையிட்டு அவருடைய மன்னிப்பை நாடுவது வெறும் வார்த்தைகளைச் சொல்வதால் நிறைவேறிவிடாது. முதலாவதாக நாம் செய்த பாவங்களை உணர வேண்டும். நம்முடைய பாவ எண்ணங்களாலும் செயல்களாலும் வார்த்தைகளாலும் நம்மை மிகவும் நேசிக்கும் கர்த்தரைத் துன்பப்படுத்திவிட்டோமே என்ற மனவருத்தம் உண்டாக வேண்டும். இனிமேல் அப்படிப்பட்ட பாவ வாழ்க்கை வாழக் கூடாது என்ற வாஞ்சையும் தாகமும் இருக்கவேண்டும். இந்த மனநிலையில் நம்முடைய பாவங்களுக்காகக் கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்கும்போது, அவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். நாம் பாவமே செய்யாததுபோல நம்மைச் சுத்தமாக்கிவிடுகிறார். ஆண்டவரே பாவத்தின் பிடியிலிருந்து எனக்கு விடுதலை தாரும் என்று கேட்டால், நாம் மீண்டும் பாவத்தில் விழாதபடி நம்மைப் பெலப்படுத்துகிறார். பாவமன்னிப்பு, நம்மைப் பாவத்திலிருந்து விலக்கி, கர்த்தருக்காக வாழும் பரிசுத்த வாழ்க்கையில் வழிநடத்த வேண்டும்.
ஜெபம்
ஆண்டவரே, மறுபடியும் நான் பாவத்தில் சிக்கிக் கொள்ளாமல், உமக்குப் பிரியமான பரிசுத்த வாழ்க்கை வாழ எனக்கு உதவி செயும். ஆமென்.