காலைத் தியானம் – ஆகஸ்ட் 27, 2020

நெகே 1: 1 – 11

என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும்

நெகேமியாவின் சரித்திரம் எஸ்றா புத்தகத்தில் உள்ள சரித்திரத்தின் தொடர்ச்சி. எஸ்றாவும் நெகேமியாவும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள். பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட யூதர்கள் சமுதாய அந்தஸ்தில் உயர்ந்துவிட்ட காலம் அது. நெகேமியா அர்தசஷ்டா என்னும் பாபிலோனிய ராஜாவின் பானபாத்திரக்காரன். எருசலேமின் அலங்கம் இடிபட்டுக் கிடப்பதைத் தன் ஊராகிய எருசலேமிலிருந்து வந்த ஆனானி மூலமாகவும் அவனுடன் வந்த மற்ற சில மனிதர் மூலமாகவும் நெகேமியா அறிந்து கொண்டான். கர்த்தர் எப்படி எருசலேமின் அலங்கத்தை நெகேமியாவைக் கொண்டு கட்டியெழுப்பினார் என்பதைத் தான் நெகேமியாவின் புத்தகத்தில் நாம் பார்க்கிறோம். இந்த மாபெரும் வேலையில் ஆனானிக்கு ஒரு முக்கியமான (முதல்) பங்கு இருந்தது என்பதை நாம் கவனித்ததுண்டா? உனக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலை உலகின் பார்வையில் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் உன் ஆண்டவரின் பரலோகத்திட்டத்தில் அதற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. 

ஜெபம்

ஆண்டவரே, மறுபடியும் நான் பாவத்தில் சிக்கிக் கொள்ளாமல், ஆண்டவரே, உம்முடைய பெரிய திட்டங்களில் என்னுடைய சிறிய செயலுக்கும் ஒரு முக்கிய இடமிருக்கிறது என்பதை உணர்த்தியதற்காக நன்றி சுவாமி. ஆமென்.