காலைத் தியானம் – ஆகஸ்ட் 28, 2020

நெகே 1: 1- 11   

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான்… அழுது… துக்கித்து, உபவாசித்து, மன்றாடி

முதலாம் அதிகாரத்தையே மூன்று நாட்கள் தியானிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி எத்தனையோ அநியாயங்கள் நடக்கின்றன. வேலை செய்யுமிடத்தில், அரசாங்கத்தில், திருச்சபையில் . . .  நம்மால் என்ன செய்யமுடியும் என்று சொல்லிவிட்டு சும்மாயிருந்துவிடுகிறோமோ? நம்மைச் சுற்றி துன்பத்திலும், வறுமையிலும் வாழும் மக்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து ஐயோ பாவம் என்று சொல்லிவிட்டு நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று போய் விடுகிறோமோ? உன் முன் நடக்கும் அநியாயம் உன்னைப் பாதிக்கின்றதா? உன் மனதை உடைக்கின்றதா? நீ உபவாசித்து ஜெபிக்கிறாயா அலது மற்றவர்களைக் குறை சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறாயா?

ஜெபம்

ஆண்டவரே, உமக்குப் பிரியமில்லாத காரியங்கள் என் மனதையும் உடைக்கட்டும் சுவாமி. ஆமென்.