காலைத் தியானம் – ஆகஸ்ட் 29, 2020

நெகே 1: 1- 11   

நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்

இன்று நம்மைச் சுற்றி நடக்கும் அநியாயங்களுக்கும், மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கும் காரணம் மற்றவர்கள்தான் என்று நினைத்து விடுகிறோம். நெகேமியா அப்படி சொல்லவில்லை. நானும் என் குடும்பத்தினரும் பாவம் செய்துவிட்டோம் என்று சொல்லி பாவமன்னிப்பு கேட்கிறார். இன்று மனிதராகிய நாம் அனைவரும் அனுபவிக்கும் பலவிதமான துன்பங்களுக்குக் காரணம் நம் எல்லாருடைய பாவங்களும்தான். அதில் என்னுடைய தனிப்பட்ட பாவ வாழ்க்கைக்கும் உன்னுடைய தனிப்பட்ட பாவ வாழ்க்கைக்கும் பங்கு உண்டு. அதை நாம் உணரும்போது ஆண்டவர் நம் ஜெபத்தைக் கேட்பார். கர்த்தருடைய ராஜியம் பரலோகத்தில் இருப்பதுபோல பூமியிலேயும் நிலைநிறுத்தப்படும்.

ஜெபம்

ஆண்டவரே, என் பாவங்களை மன்னியும். பாவ சுபாவத்தை என்னிலிருந்து நீக்கிப் போடும். ஆமென்.