காலைத் தியானம் – ஆகஸ்ட் 30, 2020

நெகே 1: 1- 11   

தேவனை நோக்கி ஜெபம் பண்ணி, ராஜாவைப் பார்த்து

உனக்கு என்ன வேண்டும் என்று நெகேமியாவைப் பார்த்து ராஜா கேட்கிறார். பதில் சொல்வதற்கு முன் நெகேமியா ஒரு சிறிய ஜெபம் செய்துவிட்டு ராஜாவிடம் பதில் சொல்கிறார். அந்த குறுகிய நேரத்தில் நெகேமியா என்ன ஜெபம் செய்திருப்பார்? ஆண்டவரே நான் பேசுவதற்கு  சரியான வார்த்தைகளை எனக்குத் தாரும் என்று ஜெபித்திருக்கலாம். அல்லது ராஜாவின் கண்களிலே எனக்கு தயவு கிடைக்கட்டும் என்று ஜெபித்திருக்கலாம். எதுவாயிருந்தாலும் நெகேமியா விரைவாக ஒரு சிறிய ஜெபம் செய்தார் என்பது முக்கியம். இதைக் குறித்து எத்தனையோ முறை கர்த்தரிடம் நீண்ட நேரம் ஜெபித்துவிட்டேன், ஆகையால் இப்போது ஜெபிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நெகேமியா நினைக்கவில்லை.  நம் ஆண்டவரோடு எல்லா நேரங்களிலும் எல்லா காரணங்களுக்காகவும் பேச கற்றுக் கொள்வோமாக.

ஜெபம்

ஆண்டவரே, நாள் முழுவதும் உம்மோடு பேசிக் கொண்டேயிருக்கும் ஆனந்தத்தை எனக்குத் தாரும். ஆமென்.