நெகே 3: 1 – 14
பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும் . . . ஆசாரியர்களும் ஆட்டுவாசலைக் கட்டினார்கள்
எருசலேம் மிகப்பெரிய பட்டணம். பல ஊர்களிலிருந்தும், பல திசைகளிலிருந்தும் நெடுஞ்சாலைகள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தன. ஆகையால் எருசலேமைச் சுற்றியிருந்த கோட்டைக்குப் பல வாசல்கள் இருந்தன. ஆட்டு வாசல் வழியாகத்தான் எருசலேம் தேவாலயத்தில் பலியிடும்படி ஆடுகள் கொண்டுவரப்பட்டன. ஆகையால் அப்பகுதியைக் கட்டும் பொறுப்பு பிரதான ஆசாரியனிடமும் அவரோடு சேர்ந்த ஆசாரியர்களிடமும் கொடுக்கப்பட்டது. அந்த ஆசாரியர்கள் தங்கள் வார்த்தைகளால் மாத்திரமல்ல, தங்கள் செயல்களாலும் மக்களை வழி நடத்தினார்கள். இன்று அரசாங்க வேலையாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, திருச்சபையாக இருந்தாலும் சரி அல்லது கிறிஸ்தவ ஊழியங்களாக இருந்தாலும் சரி, பதவி உயர உயர மற்றவர்களை வேலை வாங்குவதுதான் கூடுகிறதே தவிர, நானும் என் தோள் கொடுத்து வேலை செய்வேன் என்கிற எண்ணம் ஒரு சிலரிடமே காணப்படுகிறது. இந்த நிலை மாறி, அனைவரும் சேர்ந்து உழைக்கும் சூழ்நிலை உருவாக ஜெபித்து செயல்படுவோம்.
ஜெபம்
ஆண்டவரே, என் பொறுப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் மற்றவர்களோடு சேர்ந்து உழைக்கும் மனநிலையை எனக்குத் தாரும். ஆமென்.