நெகே 4: 1 – 6
சன்பல்லாத் . . . கோபித்து எரிச்சலடைந்து
கர்த்தருடைய திட்டம் ஒன்று உருவாகும்போதே அத்திட்டத்திற்கு எதிரிகளும் உருவாகிவிடுகிறார்கள் என்பதை மறுபடியும் பார்க்கிறோம். சன்பல்லாத், தொபியா, கேஷேம் ஆகிய மூவர் இந்த எதிர்ப்பின் தலைவர்கள் போலத் தெரிகிறது. நெகேமியா 2:19ல் அவர்கள் நெகேமியாவையும் அவனோடு சேர்ந்தவர்களையும் கிண்டல் பண்ணியதைப் பார்த்தோம். கிண்டல் அவர்கள் எதிர்பார்த்த தடங்கலை உண்டுபண்ணவில்லை. அலங்கம் கட்டும் வேலை தீவிரமாக நடைபெறுகிறது. இப்பொழுது அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. கர்த்தருடைய வேலையைச் செய்யும்போது கண்டிப்பாக எதிர்ப்பு வரும். சாத்தான் சும்மாயிருக்கமாட்டான். நாம் எதிர்ப்புகளை எதிர்பார்த்து தயாராக இருந்தால், அவை வரும்போது சோர்ந்துபோக மாட்டோம். கர்த்தர் நம் பக்கத்தில் இருந்தால் நாம் யாருக்குப் பயப்படவேண்டும்?
ஜெபம்
ஆண்டவரே, எதிர்ப்புகளைப் பார்த்து சோர்ந்து போகாதபடி என்னைப் பெலப்படுத்தும். ஆமென்.