நெகே 5: 6 – 13
மிகவும் கோபம் கொண்டு, என் மனதிலே ஆலோசனை பண்ணி
பொதுவாக கோபம் ஒரு நல்ல குணம் அல்ல. தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்வது கொலைக்குச் சமம் என்று இயேசு கிறிஸ்து மத்தேயு 5: 21, 22ம் வசனங்களில் சொல்லுகிறார். கோபம் கொள்வது நல்லதல்ல என்பதைச் சுட்டிக்காட்டும் வசனங்கள் வேதாகமத்தில் அநேகம் உண்டு. இருந்தாலும் நாம் கோபப்படவேண்டிய தருணங்களும் உண்டு. அநியாயங்களைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மாயிருக்கக் கூடாது. அதே சமயம் எபேசியர் 4:26ல் சொல்லியிருக்கிறபடி, நாம் கோபம் கொண்டாலும் பாவம் செய்யாமலிருக்கவேண்டும். யூதர்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவதை அறிந்தவுடன் நெகேமியா மிகவும் கோபங்கொண்டார். ஆனால் எவ்விதமான பாவமும் செய்யவில்லை. அவர் தன் மனதிலே ஆலோசனை பண்ணினார். பின்பு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கூடி வரச்செய்து, அவர்களிடம் கலந்து பேசி, பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். அநியாயங்களைத் தடுக்க நீ என்ன செய்கிறாய்?
ஜெபம்
ஆண்டவரே, என்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களைத் தடுக்க நான் என்ன செய்யவேண்டும் என்பதை எனக்குக் காண்பியும். ஆமென்.