காலைத் தியானம் – செப்டம்பர் 10, 2020

நெகே 5: 14 – 19           

அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை

நெகேமியா யூதா தேசத்தின் அதிபதியாக இருந்த 12 வருட காலத்தை அதற்கு முந்திய காலத்தோடு ஒப்பிடுகிறார். நெகேமியாவுக்கு முன்னிருந்தவர்கள் அவர்களுடைய அதிகாரத்தை உபயோகப்படுத்தி, தங்களுடைய சொந்த நலனுக்காக பொருட்களைச் சேர்த்துக் கொண்டார்கள். மக்களுக்கு பாரமாயிருந்ததைக் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. நெகேமியாவோ மக்கள் அனுபவித்த பாடுகள் கடினமாயிருந்தபடியால் தனக்கு வரவேண்டிய படியைக் கூட வாங்கவில்லை என்று சொல்லுகிறார். ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்யும் மருத்தவர்கள் இந்த நாட்களிலும் உண்டு. அதே சமயம், இவ்வளவு பணத்தை எடுத்து வைக்காவிட்டால், எப்படிப்பட்ட கவலைக்கிடமான சூழ்நிலையாக இருந்தாலும் நோயாளியைப் பார்க்கக் கூட மாட்டேன் என்று சொல்லும் மருத்துவர்களும் உண்டு. மருத்துவர்களில் மாத்திரமல்ல, ஒவ்வொரு தொழிலும் இப்படிப்பட்ட இருவகை மனிதர்கள் உண்டு. நீ எப்படிப்பட்டவன்(ள்)?

ஜெபம்

ஆண்டவரே, ஏழைகளுக்கு இரங்கும் மனதை எனக்குத் தாரும். ஆமென்.