காலைத் தியானம் – செப்டம்பர் 11, 2020

நெகே 6: 1- 8    

முத்திரை போடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்

எதிரிகளின் கிண்டல், கோபம், யுத்தம் செய்வோம் என்னும் மிரட்டல், இவை எதுவும் வேலை செய்யவில்லை. எனவே எதிரிகள் அடுத்த நிலை சூழ்ச்சிக்குப் போய்விட்டார்கள். பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று கூப்பிட்டு நெகேமியாவைக் கொன்று போட திட்டம் போட்டார்கள். நெகேமியா பேச்சு வார்த்தை அழைப்புக்கு இணங்கவில்லை. அடுத்ததாக நெகேமியாவின் பெயருக்குக் களங்கம் வரும் வகையில் அவர்மீது பழிகளைச் சுமத்தி, அப்பழிகளை எல்லாருக்கும் தெரியும் வகையில் முத்திரை போடாத கடிதத்தில் எழுதி அனுப்பினார்கள். ஒருவருடைய பெயருக்குக் களங்கம் வரும் வகையில் உருவாக்கப்படும் புரளியைப் போல மனதைப் புண்படுத்தும் தாக்குதல் வேறே ஒன்றுமில்லை. ஆனால் அதையும் நெகேமியா பொருட்படுத்தாமல், நீங்கள் எழுதியுள்ளவைகள் அனைத்தும் வெறும் கற்பனையே என்று சொல்லி கடிதம் கொண்டுவந்தவர்களை அனுப்பிவிட்டான். பதிலுக்குத் தன் நிலையை விளக்கி ஒரு கடிதம்கூட எழுதவில்லை.

ஜெபம்

ஆண்டவரே, என் பெயருக்குக் களங்கம் உண்டு பண்ணுகிறவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை எனக்குப் போதியும். ஆமென்.