காலைத் தியானம் – செப்டம்பர் 17, 2020

நெகே 8: 6 – 12           

ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள் 

கர்த்தருடைய வார்த்தையைக் கேட்ட மக்கள் கர்த்தரை முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டார்கள். ஆமென், ஆமென் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன ஆமென் என்ற வார்த்தைக்கும் நாம் சொல்லும் ஆமெனுக்கும் அதிக வித்தியாசம் இருப்பது போல தோன்றுகிறது! நாம் ஆமென் என்று சொல்லும்போது ஜெபத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து அதை ஆமோதித்து, அப்படியே ஆகக்கடவது என்ற அர்த்தத்தை உணர்ந்து ஆமென் சொல்லுகிறோமா? மக்கள் கூடியிருந்த அந்த நாள் கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள் என்றும் அது கொண்டாடப்பட வேண்டிய நாள் என்றும் அவர்களுக்குச் சொன்ன எஸ்றா, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள் என்று ஞாபகப்படுத்துகிறார். இல்லாதவர்களுக்குக் கொடுப்பது கொண்டாடுவதின் ஒரு முக்கிய பகுதி. நீ உன் பிறந்த நாளையும், பிள்ளைகளின் பிறந்த நாட்களையும், உன் திருமண நாளையும் எப்படி கொண்டாடுகிறாய்?

ஜெபம்

ஆண்டவரே, கொண்டாட்டம் என்ற பெயரில் நான் சுய நலனுக்காக செலவழிக்காமல், கொண்டாட வேண்டிய நாட்களில் இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்.