காலைத் தியானம் – செப்டம்பர் 20, 2020

நெகே 9: 7 – 21              

எங்கள் பிதாக்களாகிய அவர்களோ. . . தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி

வேதாகமத்தின் பல பகுதிகளில் இஸ்ரவேலரின் சரித்திரம் மீண்டும் மீண்டும் சுருக்கமாகச் சொல்லப்படுவதைப் பார்க்கிறோம். இன்று வாசித்த பகுதியிலும் இஸ்ரவேலரின் சரித்திரம், ஆபிரகாமைக் கர்த்தர் தெரிந்துகொண்டதில் ஆரம்பித்து எகிப்திலிருந்து மீட்டு வந்ததுவரை சொல்லப்பட்டிருக்கிறது. அந்நாட்களில் இஸ்ரவேலரின் தலைவர்கள் இந்த விதமாகக் கர்த்தர் தங்கள் முன்னோர்களுக்குச் செய்த நன்மைகளை அடிக்கடி மக்களுக்குச் சொல்லி நினைவுபடுத்திவந்தார்கள். மேலும் முன்னோர்கள் செய்த பாவங்களையும் அவர்களுக்குச் சொல்லி, நினைவு படுத்தி, அவர்களும் அப்பாவங்களைச் செய்துவிடாதபடி எச்சரிக்கப்பட்டார்கள். இன்று நமக்கு அந்த எச்சரிப்பு வேதாகமத்தின் மூலமாகக் கிடைக்கிறது. மேலும் நமக்கு நம்முடைய முன்னோர்கள், குடும்பத்தினர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாறு நன்றாகத் தெரியும். அவர்களுடைய நல்ல முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் செய்த பாவங்களையும் தவறுகளையும் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அவற்றை தவிர்க்கவேண்டும்.                        

ஜெபம்

ஆண்டவரே, என் முன்னோர்களின் வாழ்க்கைக்காக நன்றி சுவாமி. ஆமென்.